Friday 14 June 2024
முதல் திருமுறை
முதல் திருமுறை
1.001 -தோடு உடைய செவியன், விடை (திருப்பிரமபுரம் (சீர்காழி)1.001 – திருப்பிரமபுரம் – தோடுடைய செவியன்
1.001 – Tiruppiramapuram – tōṭuṭaiya ceviyaṉ
தலம் : சீர்காழி – 01-பிரமபுரம்
அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : நட்டபாடை
நாடு : சோழநாடு காவிரி வடகரை
சுவாமி : பிரமபுரீஸ்வரர்;
அம்பாள் : திருநிலைநாயகி.
திருச்சிற்றம்பலம்
தோடுடைய செவியன்விடை
யேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசிஎன்1
உள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந்
தேத்தஅருள் செய்த
பீடுடையபிர மாபுரம்மேவிய
பெம்மானிவ னன்றே.
பாடம் : 1பூசி எனது. 1
முற்றலாமையிள நாகமோடேன
முளைக்கொம்பவை பூண்டு
வற்றலோடுகல னாப்பலிதேர்ந்தென
துள்ளங்கவர் கள்வன்
கற்றல்கேட்டலுடை யார்பெரியார்கழல்
கையால்தொழு தேத்தப்
பெற்றம்ஊர்ந்தபிர மாபுரம்மேவிய
பெம்மானிவ னன்றே. 2
நீர்பரந்தநிமிர் புன்சடைமேலோர்
நிலாவெண் மதிசூடி
ஏர்பரந்தஇன வெள்வளைசோரஎன்
உள்ளங்கவர் கள்வன்
ஊர்பரந்தவுல கின்முதலாகிய
ஓரூரிது வென்னப்
பேர்பரந்தபிர மாபுரம்மேவிய
பெம்மானிவ னன்றே. 3
விண்மகிழ்ந்தமதி லெய்ததுமன்றி
விளங்குதலை யோட்டில்
உண்மகிழ்ந்துபலி தேரியவந்தென
துள்ளங்கவர் கள்வன்
மண்மகிழ்ந்தஅர வம்மலர்க்கொன்றை
மலிந்தவரை மார்பிற்
பெண்மகிழ்ந்தபிர மாபுரமேவிய
பெம்மானிவ னன்றே. 4
ஒருமைபெண்மையுடை யன்சடையன்
விடையூரும்இவ னென்ன
அருமையாகவுரை செய்யஅமர்ந்தென
துள்ளங்கவர் கள்வன்
கருமைபெற்றகடல் கொள்ளமிதந்த
தோர்காலம்இது வென்னப்
பெருமைபெற்றபிர மாபுரம்மேவிய
பெம்மானிவ னன்றே. 5
மறைகலந்தஒலி பாடலோடாடல
ராகிமழு வேந்தி
இறைகலந்தஇன வெள்வளைசோரஎன்
உள்ளங்கவர் கள்வன்
கறைகலந்தகடி யார்பொழில்நீடுயர்
சோலைக்கதிர் சிந்தப்
பிறைகலந்தபிர மாபுரம்மேவிய
பெம்மானிவ னன்றே. 6
சடைமுயங்குபுன லன்அனலன்எரி
வீசிச்சதிர் வெய்த
உடைமுயங்கும்அர வோடுழிதந்தென
துள்ளங்கவர் கள்வன்
கடல்முயங்குகழி சூழ்குளிர்கானல்அம்
பொன்னஞ்சிற கன்னம்
பெடைமுயங்குபிர மாபுரம்மேவிய
பெம்மானிவ னன்றே. 7
வியரிலங்குவரை யுந்தியதோள்களை
வீரம்விளை வித்த
உயரிலங்கையரை யன்வலிசெற்றென
துள்ளங்கவர் கள்வன்
துயரிலங்கும்உல கிற்பலஊழிகள்
தோன்றும்பொழு தெல்லாம்
பெயரிலங்கு பிரமாபுரம்மேவிய
பெம்மானிவ னன்றே. 8
தாணுதல் செய்திறை காணியமாலொடு
தண்டாமரை யானும்
நீணுதல் செய்தொழி யந்நிமிர்ந்தானென
துள்ளங்கவர் கள்வன்
வாணுதல் செய்மகளீர்
முதலாகிய வையத்தவரேத்தப்
பேணுதல் செய்பிரமாபுரம்மேவிய
பெம்மானிவ னன்றே. 9
புத்தரோடுபொறி யில்சமணும்புறங்
கூறநெறி நில்லா
ஒத்தசொல்லஉல கம்பலிதேர்ந்தென
துள்ளங்கவர் கள்வன்
மத்தயானைமறுகவ்வுரி போர்த்ததோர்
மாயம்இது வென்னப்
பித்தர்போலும்பிர மாபுரம்மேவிய
பெம்மானிவ னன்றே. 10
அருநெறியமறை வல்லமுனியகன்
பொய்கையலர் மேய
பெருநெறியபிர மாபுரம்மேவிய
பெம்மானிவன் றன்னை
ஒருநெறியமனம் வைத்துணர்ஞானசம்
பந்தன்உரை செய்த
திருநெறியதமிழ் வல்லவர்தொல்வினை
தீர்தல்எளி தாமே. 11
திருச்சிற்றம்பலம்
1.002 -குறி கலந்த இசை பாடலினான், (திருப்புகலூர்) 1.002 – திருப்புகலூர் – குறிகலந்தஇசை
1.002 – Tiruppukalūr – kuṟikalanta icai
தலம் : புகலூர்
அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : நட்டபாடை
நாடு : சோழநாடு காவிரித் தென்கரை
சுவாமி : அக்னீஸ்வரர்;
அம்பாள் : கருந்தார்குழலி.
திருச்சிற்றம்பலம்
குறிகலந்தஇசை பாடலினான்
நசையாலிவ் வுலகெல்லாம்
நெறிகலந்ததொரு நீர்மையனாயெரு
தேறிப் பலி1பேணி
முறிகலந்ததொரு தோலரைமேலுடை
யானிடம் மொய்ம்மலரின்
பொறிகலந்த பொழில்சூழ்ந்த
யலேபுயலாரும் புகலூரே.
பாடம் : 1ஏறும்பலி 1
காதிலங்குகுழை யன்னிழைசேர்திரு
மார்பன் னொருபாகம்
மாதிலங்குதிரு மேனியினான்கரு
மானின் னுரியாடை
மீதிலங்க அணிந்தானிமையோர்
தொழமேவும் மிடஞ்சோலைப்
போதிலங்குநசை யால்வரி
வண்டிசைபாடும் புகலூரே. 2
பண்ணிலாவும்மறை பாடலினானிறை
சேரும்வளை யங்கைப்
பெண்ணிலாவவுடை யான்பெரியார்கழ
லென்றுந் தொழுதேத்த
உண்ணிலாவியவர் சிந்தையுள்நீங்கா
வொருவன் னிடமென்பர்
மண்ணிலாவும்அடி யார்குடிமைத்தொழில்
மல்கும் புகலூரே. 3
நீரின்மல்குசடை யன்விடையன்னடை
யார்தம் மரண்மூன்றுஞ்
சீரின்மல்குமலை யேசிலையாகமு
னிந்தா னுலகுய்யக்
காரின்மல்குகடல் நஞ்சமதுண்ட
கடவுள்ளிட மென்பர்
ஊரின்மல்கிவளர் செம்மையினாலுயர்
வெய்தும் புகலூரே. 4
செய்யமேனிவெளி யபொடிப்பூசுவர்
சேரும் மடியார்மேல்
பையநின்றவினை பாற்றுவர்போற்றிசைத்
தென்றும் பணிவாரை
மெய்யநின்றபெரு மானுறையும்மிட
மென்ப ரருள்பேணிப்
பொய்யிலாதமனத் தார்பிரியாது
பொருந்தும் புகலூரே. 5
கழலினோசை சிலம்பின்னொலியோசை
கலிக்கப் பயில்கானில்
குழலினோசைகுறட் பாரிடம்போற்றக்
குனித்தா ரிடமென்பர்
விழவினோசையடி யார்மிடைவுற்று
விரும்பிப் பொலிந் தெங்கும்
முழவினோசைமுந் நீர2யர்வெய்த
முழங்கும் புகலூரே.
பாடம் : 2முன்னீர் 6
வெள்ளமார்ந்துமிளிர் செஞ்சடை
தன்மேல் விளங்கும்மதிசூடி
உள்ளமார்ந்தஅடி யார்தொழுதேத்த
வுகக்கும் அருள்தந்தெம்
கள்ளமார்ந்துகழி யப்பழிதீர்த்த
கடவுள் ளிடமென்பர்3
புள்ளையார்ந்தவய லின்விளைவால்வளம்
மல்கும் புகலூரே.
பாடம் : 3கடவுட்கிடமென்பர் 7
தென்னிலங்கையரை யன்வரைபற்றி
யெடுத்தான் முடிதிண்தோள்
தன்னிலங்குவிர லால்நெரிவித்திசை
கேட்டன் றருள்செய்த
மின்னிலங்குசடை யான்மடமாதொடு
மேவும் மிடமென்பர்
பொன்னிலங்கு மணிமாளிகை
மேல்மதிதோயும் புகலூரே. 8
நாகம்வைத்தமுடி யானடிகைதொழு
தேத்தும் மடியார்கள்
ஆகம்வைத்தபெரு மான்பிரமன்னொடு
மாலுந் தொழுதேத்த
ஏகம்வைத்தஎரி யாய்மிகவோங்கிய
எம்மா னிடம்போலும்
போகம்வைத்தபொழி லின்நிழலான்
மதுவாரும் புகலூரே. 9
செய்தவத்தர்மிகு தேரர்கள்சாக்கியர்
செப்பிற் பொருளல்லாக்
கைதவத்தர்மொழி யைத்தவிர்வார்கள்
கடவுள் ளிடம்போலும்
கொய்துபத்தர்மல ரும்புனலுங்கொடு
தூவித் துதிசெய்து
மெய்தவத்தின்முயல் வாருயர்
வானகமெய்தும் புகலூரே. 10
புற்றில்வாழும்அர வம்மரையார்த்தவன்
மேவும் புகலூரைக்
கற்று நல்லவவர் காழியுள்ஞானசம்
பந்தன் தமிழ்மாலை
பற்றியென்றும்மிசை பாடியமாந்தர்
பரமன் னடிசேர்ந்து
குற்றமின்றிக்குறை பாடொழியாப்புக
ழோங்கிப் பொலிவாரே. 11
திருச்சிற்றம்பலம்
Share this:
TwitterFacebookPrintWhatsAppEmail
Like this:
1.003 -பத்தரோடு பலரும் பொலிய மலர் (திருவலிதாயம் (பாடி)1.003 – திருவலிதாயம்- பத்தரோடுபல
1.003 – Tiruvalitāyam- pattarōṭupala
தலம் : வலிதாயம்
அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : நட்டபாடை
நாடு : தொண்டைநாடு
சுவாமி : வல்லீஸ்வரர்;
அம்பாள் : ஜகதாம்பாள்.
திருச்சிற்றம்பலம்
பத்தரோடுபல ரும்பொலியம்மலர்
அங்கைப் புனல்தூவி
ஒத்தசொல்லியுல கத்தவர்தாந்தொழு
தேத்த உயர்சென்னி
மத்தம்வைத்தபெரு மான்பிரியா
துறைகின்ற வலிதாயம்
சித்தம்வைத்தஅடி யாரவர்மேல
டையாமற் றிடர்நோயே. 1
படையிலங்குகரம் எட்டுடை
யான்படி றாகக்கனலேந்திக்
கடையிலங்குமனை யிற்பலிகொண்டுணுங்
கள்வன்னுறை கோயில்
மடையிலங்குபொழி லின்நிழல்வாய்மது
வீசும் வலிதாயம்
அடையநின்றஅடி யார்க்கடையாவினை
அல்லல் துயர்தானே. 2
ஐயனொய்யன்அணி யன்பிணியில்லவ
ரென்றுந் தொழுதேத்தச்
செய்யன்வெய்யபடை யேந்தவல்லான்திரு
மாதோ டுறைகோயில்
வையம்வந்துபணி யப்பிணிதீர்த்
துயர்கின்ற வலிதாயம்
உய்யும்வண்ணம்நினை மின்நினைந்தால்
வினைதீருந் நலமாமே. 3
ஒற்றைஏறதுடை யான்நடமாடி
யோர்பூதப் படைசூழப்
புற்றில்நாகம்அரை யார்த்துழல்கின்ற
எம்பெம்மான் மடவாளோ
டுற்றகோயிலுல கத்தொளிமல்
கிடஉள்கும் வலிதாயம்
பற்றிவாழும்அது வேசரணாவது
பாடும் மடியார்க்கே. 4
புந்தியொன்றிநினை வார்வினை
யாயினதீரப் பொருளாய
அந்தியன்னதொரு பேரொளியான்
அமர்கோயில் அயலெங்கும்
மந்திவந்துகடு வன்னொடுங்கூடி
வணங்கும் வலிதாயஞ்
சிந்தியாதஅவர் தம்மடும்வெந்
துயர்தீர்த லெளிதன்றே. 5
ஊனியன்றதலை யிற்பலிகொண்டு
லகத்துள் ளவரேத்தக்
கானியன்றகரி யின்னுரிபோர்த்துழல்
கள்வன் சடைதன்மேல்
வானியன்றபிறை வைத்தஎம்
மாதிமகிழும் வலிதாயம்
தேனியன்றநறு மாமலர்கொண்டு
நின்றேத்தத் தெளிவாமே. 6
கண்ணிறைந்தவிழி யின்னழலால்
வருகாமன் னுயிர்வீட்டிப்
பெண்ணிறைந்தவொரு பால்மகிழ்வெய்திய
பெம்மா னுறைகோயில்
மண்ணிறைந்தபுகழ் கொண்டடியார்கள்
வணங்கும் வலிதாயத்
துண்ணிறைந்தபெரு மான்கழலேத்த
நம்உண்மைக் கதியாமே. 7
கடலில்நஞ்சமமு துண்டிமையோர்
தொழுதேத்த நடமாடி
அடலிலங்கையரை யன்வலிசெற்றருள்
அம்மா னமர்கோயில்
மடலிலங்குகமு கின்பலவின்
மதுவிம்மும் வலிதாயம்
உடலிலங்கும் உயிர்ருள்ளளவுந்
தொழஉள்ளத் துயர்போமே. 8
பெரியமேருவரை யேசிலையா
மலைவுற்றா ரெயில்மூன்றும்
எரியஎய்தவொரு வன்னிருவர்க்
கறிவொண்ணா வடிவாகும்
எரியதாகியுற வோங்கியவன்
வலிதாயந் தொழுதேத்த
உரியராகவுடை யார்பெரியா
ரெனஉள்கும் முலகோரே. 9
ஆசியாரமொழி யாரமண்
சாக்கியரல் லாதவர்கூடி
ஏசியீரமில ராய்மொழிசெய்தவர்
சொல்லைப் பொருளென்னேல்
வாசிதீர அடியார்க்கருள்செய்து
வளர்ந்தான் வலிதாயம்
பேசும்ஆர்வ முடையாரடி
யாரெனப்பேணும் பெரியோரே. 10
வண்டுவைகும்மணம் மல்கியசோலை
வளரும் வலிதாயத்
தண்டவாணனடி யுள்குதலால்அருள்
மாலைத் தமிழாகக்
கண்டல்வைகுகடற் காழியுள்ஞான
சம்பந்தன் தமிழ்பத்துங்
கொண்டுவைகியிசை பாடவல்லார்
குளிர்வானத் துயர்வாரே. 11
திருச்சிற்றம்பலம்
1.004 -மைம் மரு பூங்குழல் கற்றை (திருவீழிமிழலை) 1.004 – திருப்புகலியும் – திருவீழிமிழலையும் – மைம்மரு பூங்குழல்
1.004 – Tiruppukaliyum – tiruvīḻimiḻalaiyum – maim’maru pūṅkuḻal
தலம் : சீர்காழி – 03-புகலி
அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : நட்டபாடை
நாடு : சோழநாடு காவிரி வடகரை
தலம் : சீர்காழி – 03-புகலி
சிறப்பு: திருவீழிமிழலையும்
சுவாமி : பிரமபுரீஸ்வரர்;
அம்பாள் : திருநிலைநாயகி.
சுவாமி : நேத்திரார்ப்பணேசுவரர்;
அம்பாள் : சுந்தரகுஜாம்பிகை.
திருச்சிற்றம்பலம்
மைம்மரு பூங்குழல் கற்றைதுற்ற
வாணுதல் மான்விழி மங்கையோடும்
பொய்ம்மொழி யாமறை யோர்களேத்தப்
புகலி நிலாவிய புண்ணியனே
எம்மிறை யேஇமை யாதமுக்கண்
ஈசஎன் நேசவி தென்கொல்சொல்லாய்
மெய்ம்மொழி நான்மறை யோர்மிழலை
விண்ணிழி கோயில் விரும்பியதே. 1
கழல்மல்கு பந்தொடம் மானைமுற்றில்
கற்றவர் சிற்றிடைக் கன்னிமார்கள்
பொழில்மல்கு கிள்ளையைச் சொற்பயிற்றும்
புகலி நிலாவிய புண்ணியனே
எழில்மல ரோன்சிர மேந்தி உண்டோர்
இன்புறு செல்வமி தென்கொல்சொல்லாய்
மிழலையுள் வேதிய ரேத்திவாழ்த்த
விண்ணிழி கோயில் விரும்பியதே. 2
கன்னிய ராடல் கலந்துமிக்க
கந்துக வாடை கலந்து துங்கப்
பொன்னியல் மாடம் நெருங்குசெல்வப்
புகலி நிலாவிய புண்ணியனே
இன்னிசை யாழ்மொழி யாளோர்பாகத்
தெம்மிறை யேஇது என்கொல்சொல்லாய்
மின்னியல் நுண்ணிடை யார்மிழலை
விண்ணிழி கோயில் விரும்பியதே. 3
நாக பணந்திகழ் அல்குல்மல்கு
நன்னுதல் மான்விழி மங்கையோடும்
பூக வனம்பொழில் சூழ்ந்தஅந்தண்
புகலி நிலாவிய புண்ணியனே
ஏக பெருந்தகை யாயபெம்மான்
எம்மிறை யேஇது என்கொல்சொல்லாய்
மேக முரிஞ்செயில் சூழ்மிழலை
விண்ணிழி கோயில் விரும்பியதே. 4
சந்தள றேறுத டங்கொள்கொங்கைத்
தையலொ டுந்தள ராதவாய்மைப்
புந்தியி னால்மறை யோர்களேத்தும்
புகலி நிலாவிய புண்ணியனே
எந்தமை யாளுடை ஈசஎம்மான்
எம்மிறை யேஇது என்கொல்சொல்லாய்
வெந்தவெண் நீறணி வார்மிழலை
விண்ணிழி கோயில் விரும்பியதே. 5
சங்கொளி1 இப்பி சுறாமகரந்
தாங்கி நிரந்து தரங்கம்மேன்மேற்
பொங்கொலி நீர்சுமந் தோங்குசெம்மைப்
புகலி நிலாவிய புண்ணியனே
எங்கள்பி ரானிமை யோர்கள்பெம்மான்
எம்மிறை யேஇது என்கொல்சொல்லாய்
வெங்கதிர் தோய்பொழில் சூழ்மிழலை
விண்ணிழி கோயில் விரும்பியதே.
பாடம் : 1சங்கொலி 6
காமனெ ரிப்பிழம் பாகநோக்கிக்
காம்பன தோளியொ டுங்கலந்து
பூமரு நான்முகன் போல்வரேத்தப்
புகலி நிலாவிய புண்ணியனே
ஈமவ னத்தெரி ஆட்டுகந்த
எம்பெரு மான்இது என்கொல்சொல்லாய்
வீமரு தண்பொழில் சூழ்மிழலை
விண்ணிழி கோயில் விரும்பியதே. 7
இலங்கையர் வேந்தெழில் வாய்த்ததிண்டோ
ளிற்றல றவ்விர லொற்றியைந்து
புலங்களைக் கட்டவர் போற்றஅந்தண்
புகலி நிலாவிய புண்ணியனே
இலங்கெரி யேந்திநின் றெல்லியாடும்
எம்மிறை யேஇது என்கொல்சொல்லாய்
விலங்கலொண் மாளிகை சூழ்மிழலை
விண்ணிழி கோயில் விரும்பியதே. 8
செறிமுள ரித்தவி சேறியாறுஞ்
செற்றதில்2 வீற்றிருந் தானுமற்றைப்
பொறியர வத்தணை யானுங்காணாப்
புகலி நிலாவிய புண்ணியனே
எறிமழு வோடிள மான்கையின்றி
யிருந்தபி ரான்இது என்கொல்சொல்லாய்
வெறிகமழ் பூம்பொழில் சூழ்மிழலை
விண்ணிழி கோயில் விரும்பியதே.
பாடம் : 2சேறியாரும் சேற்றிதில் 9
பத்தர் கணம்பணிந் தேத்தவாய்த்த
பான்மைய தன்றியும் பல்சமணும்
புத்தரும் நின்றலர் தூற்றஅந்தண்
புகலி நிலாவிய புண்ணியனே
எத்தவத் தோர்க்குமி லக்காய்நின்ற
எம்பெரு மான்இது என்கொல்சொல்லாய்
வித்தகர் வாழ்பொழில் சூழ்மிழலை
விண்ணிழி கோயில் விரும்பியதே. 10
விண்ணிழி கோயில் விரும்பிமேவும்
வித்தக மென்கொலி தென்றுசொல்லிப்
புண்ணிய னைப்புக லிந்நிலாவு
பூங்கொடி யோடிருந் தானைப்போற்றி
நண்ணிய கீர்த்தி நலங்கொள்கேள்வி
நான்மறை ஞானசம் பந்தன்சொன்ன
பண்ணியல் பாடல்வல் லார்களிந்தப்
பாரொடு விண்பரி பாலகரே. 11
திருச்சிற்றம்பலம்
Share this:
TwitterFacebookPrintW
1.005 -செய் அருகே புனல் பாய, (கீழைத்திருக்காட்டுப்பள்ளி)
1.006 -அங்கமும் வேதமும் ஓதும் நாவர் (திருமருகலும் திருச்செங்காட்டங்குடியும்)
1.007 -பாடக மெல் அடிப் பாவையோடும், (திருநள்ளாறும் திருஆலவாயும்)
1.008 -புண்ணியர், பூதியர், பூத நாதர், (திருஆவூர்ப்பசுபதீச்சுரம் (ஆவூர்)
1.009 -வண்டு ஆர் குழல் அரிவையொடு (திருவேணுபுரம் (சீர்காழி)
1.010 -உண்ணாமுலை உமையாளொடும் உடன் ஆகிய (திருவண்ணாமலை)
1.011 -சடை ஆர் புனல் உடையான், (திருவீழிமிழலை)
1.012 -மத்தா வரை நிறுவி, கடல் (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்))
1.013 -குரவம் கமழ் நறு மென் (திருவியலூர்)
1.014 -வானில் பொலிவு எய்தும் மழை (திருக்கொடுங்குன்றம் (பிரான்மலை)
1.015 -மை ஆடிய கண்டன், மலை (திருநெய்த்தானம்)
1.016 -பால் உந்து உறு திரள் (திருப்புள்ளமங்கை)
1.017 -மனம் ஆர்தரு மடவாரொடு மகிழ் (திருஇடும்பாவனம்)
1.018 -சூலம் படை; சுண்ணப்பொடி சாந்தம், (திருநின்றியூர்)
1.019 -பிறை அணி படர் சடை (சீர்காழி)
1.020 -தட நிலவிய மலை நிறுவி, (திருவீழிமிழலை)
1.021 -புவம், வளி, கனல், புனல், (திருச்சிவபுரம்)
1.022 -சிலை தனை நடு இடை (திருமறைக்காடு (வேதாரண்யம்)
1.023 -மடையில் வாளை பாய, மாதரார் குடையும் (திருக்கோலக்கா)
1.024 -பூஆர் கொன்றைப் புரிபுன் சடை (சீர்காழி)
1.025 -மரு ஆர் குழலிமாது ஓர் (திருச்செம்பொன்பள்ளி)
1.026 -வெங் கள் விம்மு வெறி (திருப்புத்தூர்)
1.027 -முந்தி நின்ற வினைகள் அவை (திருப்புன்கூர்)
1.028 -செப்பம் நெஞ்சே, நெறி கொள்! (திருச்சோற்றுத்துறை)
1.029 -ஊர் உலாவு பலி கொண்டு, (திருநறையூர்ச்சித்தீச்சுரம் (திருநறையூர்)
1.030 -விதி ஆய், விளைவு ஆய், (திருப்புகலி -(சீர்காழி )
1.031 -விழுநீர், மழுவாள் படை, அண்ணல் (திருக்குரங்குஅணில்முட்டம்)
1.032 -ஓடே கலன்; உண்பதும் ஊர் (திருவிடைமருதூர்)
1.033 -கணை நீடு எரி, மால், (திருஅன்பில் ஆலந்துறை)
1.034 -அடல் ஏறு அமரும் கொடி (சீர்காழி)
1.035 -அரை ஆர் விரி கோவண (திருவீழிமிழலை)
1.036 -கலை ஆர் மதியோடு உர (திருவையாறு)
1.037 -அரவச் சடை மேல் மதி, (திருப்பனையூர்)
1.038 -கரவு இன்றி நல்மாமலர் கொண்டே இரவும் (திருமயிலாடுதுறை)
1.039 -அந்தமும் ஆதியும் ஆகிய அண்ணல் (திருவேட்களம்)
1.040 -பொடி உடை மார்பினர், போர் (திருவாழ்கொளிபுத்தூர்)
1.041 -சீர் அணி திகழ் திருமார்பில் (திருப்பாம்புரம்)
1.042 -பைம் மா நாகம், பல்மலர்க் (திருப்பேணுபெருந்துறை)
1.043 -வடம் திகழ் மென் முலையாளைப் (திருகற்குடி (உய்யக்கொண்டான்மலை)
1.044 -துணி வளர் திங்கள் துளங்கி (திருப்பாச்சிலாச்சிராமம் (திருவாசி)
1.045 -துஞ்ச வருவாரும், தொழுவிப்பாரும், வழுவிப் (திருவாலங்காடு (பழையனூர்)
1.046 -குண்டைக் குறள் பூதம் குழும, (திருவதிகை வீரட்டானம்)
1.047 -பல் அடைந்த வெண் தலையில் (திருச்சிரபுரம் (சீர்காழி)
1.048 -நூல் அடைந்த கொள்கையாலே நுன் (திருச்சேஞலூர்)
1.049 -போகம் ஆர்த்த பூண் முலையாள் (திருநள்ளாறு)
1.050 -மெய்யர் ஆகிப் பொய்யை நீக்கி, (திருவலிவலம்)
1.051 -வெங் கண் ஆனை ஈர் (திருச்சோபுரம் (தியாகவல்லி)
1.052 -மறை உடையாய்! தோல் உடையாய்! (திருநெடுங்களம்)
1.053 -தேவராயும், அசுரராயும், சித்தர், செழுமறை (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்)
1.054 -பூத் தேர்ந்து ஆயன கொண்டு, (திருஓத்தூர் (செய்யாறு)
1.055 -ஊறி ஆர்தரு நஞ்சினை உண்டு, (திருமாற்பேறு)
1.056 -கார் ஆர் கொன்றை கலந்த (திருப்பாற்றுறை)
1.057 -ஒள்ளிது உள்ள, கதிக்கு ஆம்; (திருவேற்காடு)
1.058 -அரியும், நம் வினை உள்ளன (திருக்கரவீரம்)
1.059 -ஒடுங்கும் பிணி, பிறவி, கேடு, (திருத்தூங்கானைமாடம்)
1.060 -வண் தரங்கப் புனல் கமல (சீர்காழி )
1.061 -நறை கொண்ட மலர் தூவி, (திருச்செங்காட்டங்குடி)
1.062 -நாள் ஆய போகாமே, நஞ்சு (திருக்கோளிலி (திருக்குவளை)
1.063 -எரி ஆர் மழு ஒன்று (திருப்பிரமபுரம் (சீர்காழி)
1.064 -அறை ஆர் புனலும் மா (திருப்பூவணம்)
1.065 -அடையார் தம் புரங்கள் மூன்றும் (திருப்பல்லவனீச்சரம்)
1.066 -பங்கம் ஏறு மதி சேர் (திருச்சண்பைநகர் (சீர்காழி)
1.067 -கண் மேல் கண்ணும், சடைமேல் (திருப்பழனம்)
1.068 -பொடி கொள் உருவர், புலியின் (திருக்கயிலாயம்)
1.069 -பூ ஆர் மலர் கொண்டு (திருவண்ணாமலை)
1.070 -வானத்து உயர் தண்மதி தோய் (திருஈங்கோய்மலை)
1.071 -பிறை கொள் சடையர்; புலியின் (திருநறையூர்ச்சித்தீச்சுரம் (திருநறையூர்)
1.072 -வார் ஆர் கொங்கை மாது (திருக்குடந்தைக்காரோணம் (விஸ்வநாதர்கோவில்)
1.073 -வான் ஆர் சோதி மன்னு (திருக்கானூர்)
1.074 -நறவம் நிறை வண்டு அறை (திருப்புறவம்)
1.075 -காலை நல்மாமலர் கொண்டு அடி (திருவெங்குரு (சீர்காழி)
1.076 -மலையினார் பருப்பதம், துருத்தி, மாற்பேறு, (திருஇலம்பையங்கோட்டூர்)
1.077 -பொன் திரண்டன்ன புரிசடை புரள, (திருஅச்சிறுபாக்கம்)
1.078 -வரி வளர் அவிர் ஒளி (திருஇடைச்சுரம்)
1.079 -அயில் உறு படையினர்; விடையினர்; (சீர்காழி)
1.080 -கற்றாங்கு எரி ஓம்பி, கலியை (கோயில் (சிதம்பரம்)
1.081 -நல்லார், தீ மேவும் தொழிலார், (சீர்காழி)
1.082 -இரும் பொன்மலை வில்லா, எரி (திருவீழிமிழலை)
1.083 -அடையார் புரம் மூன்றும் அனல்வாய் (திருஅம்பர்மாகாளம்)
1.084 -புனையும் விரிகொன்றைக் கடவுள், புனல் (திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்)
1.085 -கல்லால் நிழல் மேய கறை (திருநல்லம்)
1.086 -கொட்டும் பறை சீரால் குழும, (திருநல்லூர்)
1.087 -சுடு கூர் எரிமாலை அணிவர்; (திருவடுகூர் (ஆண்டார்கோவில்)
1.088 -முற்றும் சடை முடி மேல் (திருஆப்பனூர்)
1.089 -படை ஆர்தரு பூதப் பகடு (திருஎருக்கத்தம்புலியூர் (இராசேந்திரப்பட்டிணம்)
1.090 -அரனை உள்குவீர்! பிரமன் ஊருள் (திருப்பிரமபுரம் (சீர்காழி))
1.091 -சித்தம் தெளிவீர்காள்! அத்தன் ஆரூரைப் பத்தி (திருவாரூர்)
1.092 -வாசி தீரவே, காசு நல்குவீர்! மாசு (திருவீழிமிழலை)
1.093 -நின்று மலர் தூவி, இன்று (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்)
1.094 -நீலமாமிடற்று ஆலவாயிலான் பால் அது ஆயினார் (திருஆலவாய் (மதுரை)
1.095 -தோடு ஓர் காதினன்; பாடு (திருவிடைமருதூர்)
1.096 -மன்னி ஊர் இறை; சென்னியார், (திருஅன்னியூர் (பொன்னூர்)
1.097 -எய்யா வென்றித் தானவர் ஊர்மூன்று (திருப்புறவம்)
1.098 -நன்று உடையானை, தீயது இலானை, (திருச்சிராப்பள்ளி)
1.099 -வம்பு ஆர் குன்றம், நீடு (திருக்குற்றாலம்)
1.100 -நீடு அலர் சோதி வெண்பிறையோடு (திருப்பரங்குன்றம்)
1.101 -தண் ஆர் திங்கள், பொங்கு (திருக்கண்ணார்கோவில் (குறுமாணக்குடி) )
1.102 -உரவு ஆர் கலையின் கவிதைப் (சீர்காழி)
1.103 -தோடு உடையான் ஒரு காதில்-தூய (திருக்கழுக்குன்றம்)
1.104 -ஆடல் அரவு அசைத்தான், அருமாமறைதான் (திருப்புகலி -(சீர்காழி )
1.105 -பாடலன் நால்மறையன்; படி பட்ட (திருவாரூர்)
1.106 -மாறு இல் அவுணர் அரணம் (திருஊறல் (தக்கோலம்))
1.107 -வெந்த வெண் நீறு அணிந்து, (திருக்கொடிமாடச்செங்குன்றூர் (திருச்செங்கோடு)
1.108 -மின் இயல் செஞ்சடைமேல் விளங்கும் (திருப்பாதாளீச்சரம்)
1.109 -வார் உறு வனமுலை மங்கை (திருச்சிரபுரம் (சீர்காழி)
1.110 -மருந்து அவன், வானவர் தானவர்க்கும் பெருந்தகை, (திருவிடைமருதூர்)
1.111 -அருத்தனை, அறவனை, அமுதனை, நீர் (திருக்கடைமுடி (கீழையூர்)
1.112 -இன்குரல் இசை கெழும் யாழ் (திருச்சிவபுரம்)
1.113 -எரித்தவன், முப்புரம் எரியில் மூழ்க தரித்தவன், (திருவல்லம்)
1.114 -குருந்து அவன், குருகு அவன், (திருமாற்பேறு)
1.115 -சங்கு ஒளிர் முன் கையர் (திருஇராமனதீச்சரம்)
1.116 -அவ் வினைக்கு இவ் வினை (பொது -திருநீலகண்டப்பதிகம்)
1.117 -காடு அது, அணிகலம் கார் (திருப்பிரமபுரம் (சீர்காழி)
1.118 -சுடுமணி உமிழ் நாகம் சூழ்தர (திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்)
1.119 -முள்ளின் மேல் முது கூகை (திருக்கள்ளில்)
1.120 -பணிந்தவர் அருவினை பற்று அறுத்து (திருவையாறு)
1.121 -நடை மரு திரிபுரம் எரியுண (திருவிடைமருதூர்)
1.122 -விரிதரு புலிஉரி விரவிய அரையினர், திரிதரும் (திருவிடைமருதூர்)
1.123 -பூ இயல் புரிகுழல்; வரிசிலை (திருவலிவலம்)
1.124 -அலர்மகள் மலிதர, அவனியில் நிகழ்பவர் மலர் (திருவீழிமிழலை)
1.125 -கலை மலி அகல் அல்குல் (திருச்சிவபுரம்)
1.126 -பந்தத்தால் வந்து எப்பால் பயின்று (சீர்காழி)
1.127 -பிரம புரத்துறை பெம்மா னெம்மான் பிரம (திருப்பிரமபுரம் (சீர்காழி)
1.128 -ஓர் உரு ஆயினை; மான் (திருப்பிரமபுரம் (சீர்காழி))
1.129 -சே உயரும் திண் கொடியான் (சீர்காழி)
1.130 -புலன் ஐந்தும் பொறி கலங்கி, (திருவையாறு)
1.131 -மெய்த்து ஆறுசுவையும், ஏழ் இசையும், (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்)
1.132 -ஏர் இசையும் வட-ஆலின்கீழ் இருந்து, (திருவீழிமிழலை)
1.133 -வெந்த வெண்பொடிப் பூசும் மார்பின் (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்)
1.134 -கருத்தன், கடவுள், கனல் ஏந்தி (திருப்பறியலூர் (பரசலூர்)
1.135 -நீறு சேர்வது ஒர் மேனியர், (திருப்பராய்துறை)
1.136 -மாதர் மடப்பிடியும் மட அன்னமும் (தருமபுரம்)