Author: admin
திருவூஞ்சல் பாடல்கள்
புங்குடுதீவு பாணாவிடைப்பதி ஸ்ரீ பர்வதவர்த்தனி அம்பாள் சமேத இராமலிங்கேஸ்வரர் திருவூஞ்சல் காப்பு பொன்னிலங்கு ஈழத்து ராமேஸ்வரப் பூங்குடியின் பாணாவிடைத் தலத்தில் மேவும் அன்னை பர்வதவர்த்தனி சமேதரராகி அரனார் ராமலிங்கேஸ்வரர் மகிழ்ந்தே கன்னல் தமிழ் திருவூஞ்சல் தனிலே வைதி களித்தாட ஊஞ்சலிசை பாடி ஏத்த வன்னமருப் பழகனான வார ணனின் வளந் திகழும் செஞ்சரணம் காப்பு தாமே. வேத நாற்பவளத் தூண் விளங்க நாட்டி விரிந்த…