பஜனை

சிவன் பஜனை

1. சிவசிவ சிவசிவ சிவாயநம ஓம்
அரகர கரகர கராய நமஓம்
ஜெகதீஸ்வராய சிவாய நமஓம்
சர்வேஸ்வராய சிவாய நமஓம்
பரமேஸ்வராய சிவாய நமஓம்

பவவினை தீர்க்கும் சிவாய நமஓம்
அம்பலக் கூத்தா சிவாய நமஓம்
ஆனந்த ரூபா சிவாய நமஓம். (சிவசிவ..)
சிந்தையில் நடமிடும் சிவாய நமஓம்
சிதம்பரரோசா சிவாய நமஓம்
தில்லையில் நடமிடும் சிவாய நமஓம்
திருமறை போற்றிடும் சிவாய நமஓம்
எல்லையில் ஆனந்தா சிவாய நமஓம்
எங்களை ஆளவா சிவாய நமஓம்
சிவகாம சுந்தரி சிவாய நமஓம்
சிறுமையைத் தீர்க்கும் சிவாய நமஓம். (சிவசிவ..)
நர்த்தன சுந்தர சிவாய நமஓம்
நம்பிக்கை மந்திரம் சிவாய நமஓம்
சின்மய ரூபா சிவாய நமஓம்
சிற்சபேசா சிவாய நமஓம்
அன்பர்கள் நேசா சிவாய நமஓம்
ஆண்டருள் செய்யும் சிவாய நமஓம்
அம்பலவாணா சிவாய நமஓம்
அகிலாண்டேஸ்வரா சிவாய நமஓம். (சிவசிவ..)
சுந்தரரூபா சிவாய நமஓம்
சுகுண மனோகர சிவாய நமஓம்
எங்கும் நிறைந்தவா சிவாய நமஓம்
எங்களை ஆளவா சிவாய நமஓம்
மங்களரூபா சிவாய நமஓம்
மக்களைக் காக்கும் சிவாய நமஓம்
சரணம் சரணம் சிவாய நமஓம்
சாந்தியைத் தந்தருள் சிவாய நமஓம்
அபயம் அபயம் சிவாய நமஓம்
அமைதியைத் தந்தருள் சிவாய நமஓம். (சிவசிவ..)
2. நடராஜா ஓம் நடராஜா – அருள்
ஞான சிதம்பர நடராஜா
சுடர் வடிவாம் ஜெய நடராஜா – மா
துரிய நடம்பயில் நடராஜா
கனகசபேசா நடராஜா -சிவ
காமிச மேதா நடராஜா
முனிவரகம் திகள் நடராஜா – ஜகன்
மோகன மாமுக நடராஜா
கங்கா தரசிவ நடராஜா-ஜய
கௌரி மனோகர நடராஜா
பொங்கரவம் புனை நடராஜா-இளம்
பொன்பிறை மின்சடை நடராஜா
சாம்ப சதாசிவ நடராஜா-சிவ
சங்கர சுந்தர நடராஜா
தேன்பத மேந்திய நடராஜா-திரு
தில்லையில் ஆடிய நடராஜா.

3. லிங்கா லிங்கா சிவலிங்கா
சிவசிவ சிவசிவ சிவலிங்கா
அருட்பெரும்ஜோதி சிவலிங்கா
தனிப் பெரும் கருணை சிவலிங்கா
அம்பலக் கூத்தா சிவலிங்கா
அருட்பெரும் ஜோதி சிவலிங்கா
சிவ சிவ சிவ சிவ சிவலிங்கா
சிதம்பரரேசா சிவலிங்கா
அன்பர்கள் நேசா சிவலிங்கா
ஆனந்தக் கூத்தா சிவலிங்கா
சுpவ சிவ சிவ சிவலிங்கா
சுpற்பரரேசா சிவலிங்கா
தில்லையி;ல நடம் செய்யும் சிவலிங்கா
தீஞ்சுவைத் தேனே சிவலிங்கா
சிந்தைகுடி கொண்டவரே சிவலிங்கா
சிம்மய தேவனே சிவலிங்கா
பக்தியுடன் உனைத்துதித்தேன் சிவலிங்கா
பக்கத்தில் வந்திடையா சிவலிங்கா
நாவிற் குடியிருப்பாய் சிவலிங்கா
நல்வாக்குத் தந்திடையா சிவலிங்கா
காட்சிக் கினியவனே சிவலிங்கா
காந்தம்போல் வந்திடையா சிவலிங்கா
சோமசுந்தரா சிவலிங்கா
சோமாஸ்கந்தா சிவலிங்கா
ஆந்தமும் ஆதியும் சிவலிங்கா
ஆகன்றோன் வருக சிவலிங்கா
பொற்புடன் நடம்செய் சிவலிங்கா
புனிதா வருக சிவலிங்கா
சொற்றுணை வேதியன் சிவலிங்கா
சோதியுட் கலந்தான் சிவலிங்கா
ஈர்த்தெனை ஆண்டான் சிவலிங்கா
காத்தெமை ஆண்டான் சிவலிங்காசக்தி பஜனை
ஓம் ஜெய ஜெய சக்தி
ஓம் ஸ்ரீ ஜெய ஜெய ஜெய சக்தி
ஜெய ஜெய அனுதினம் பாடிப் பணிந்தோம்
ஜெகமெங்கும் அமைதஜயைத் தா – ஓம்….

திருப்தியும் இன்பமும் வாழ்வில் துலங்கத்
தேவையெல்லாம் அடைய
அம்மம்மா தேவையெல்லாம் அடைய
பக்தி பெருகிடப் பாடியுருகிட
பணிப்பாய் அன்பிலெம்மை – ஓம்….
இரண்டுகள் போக மூன்றுகள் அகல
ஈஸ்வரி வரம் அருள்வாய்
அம்மம்மா ஈஸ்வரி வரம் அருள்வாய்
கரங்குவித்தோம் இனிக் காலை விடோமடி
கருணையுடன் அணைப்பாய் – ஓம்…
காசின் எங்கும் வேற்றுமைபோக
கருத்தினுள் அன்பருள்வாய்
அம்மம்மா கருத்தினுள் அன்பருள்வாய்
தேசுடன் வாழவழி காட்டிடுவாய் ரஸ
தேவியுடன் ததிப்போம். – ஓம்….

நமஸ்காரம் கூறிக் கருத்தினில் ஞான
நல்லொளி தீபம்வைத்து
ஞான நல்லொளி தீபம்வைத்து
நமஸ்காரம் செய்து ஆரத்திசெய்தோம்
ஞாலத்திற் கமைதியைத் தா – ஓம் ….
ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம்
சுந்தரவதனி சுகுண மனோகரி
மந்தகாசமுக மதிவதனி
சந்தன குங்கும அலங்கார முடனே
தந்திடுவா யுந்தன் தரிசனமே
நந்தி தேவருடன் முனிவரும் பணிய
ஆனந்தமுடனே வந்திடுவாய்
வுந்தனைசெய்துமு மாயன் அயனுடன்
வகையாய் உன்புகழ் பாடிடவே

தங்கச் சிலம்பு சலசலவென்றிட
தாண்டவமாடித் தனயன் மகிழ்ந்திட
பொங்கு மானந்தமுடன் புவிமேல் விளங்கும்
மங்கள நாயகி மகிழ்வாய் வருவாய்
வேதங்கள் உன்னை வேண்டிப் பாடிட
வுpரும்பிச் சரஸ்வதி வீணை வாசித்திட
ஸதானந்தமான சோதிஸ்வரூபி
ராஜ ராஜேஸ்வரி சரணம் சரணம்
கற்ப+ரநாயகியே சரணம் சரணம்
காளி மகமாயி கருமாரியம்மா
பொற்கோயில் கொண்ட சிவகாமியம்மா
ப+விருந்த வல்லி சிவகாமியம்மா
விற்கோல வேதவல்லி விசாலாட்சி
விழிக்கோல மாமதுரை மீனாட்சி
சொற்கோயில் நானமைத்தேன் இங்குதாயே
சுடராக வாழ்விப்பாய் என்னை நீயே
கண்ணிரண்டும் உன்னுருவே காணவேண்டும்
காலிரண்டும் உன்னடியே நாடவேண்டும்
பண்ணமைக்கும் நாவுனையே பாடவேண்டும்
பக்திகொடு கையுனையே கூடவேண்டும்
எண்ணமெல்லாம் உன்னினைவே ஆகவேண்டும்
இருப்பதெல்லாம் உன்னுடைய தாகவேண்டும்.
காற்றாகிக் கனலாகிக் கடலாகினாய்
கயிராகி உயிராகி உடலாகினாய்
நேற்றாகி இன்றாகி நாளாகினாய்
நிலமாகிப் பயிராகி உணவாகினாய்
தோற்றாலும் ஜெயித்தாலும் வாழ்வாகினாய்
தொழுதாலும் அழுதாலும் வடிவாகினாய்
போற்றாத நாளில்லாத் தாயேயுன்னை
பொருளோடும் புகழோடும் வைப்பாய் என்னை.

பூரணி புராதனி சுமங்கலை சுதந்தரி
புராந்தகித் திரியம்பகி எழிற்
புங்கவி விளங்கு சிவ சங்கரி சகஸ்ரதள
புட்பமிசை வீற்றிருக்கும்
நாரணி மனாதீத நாயகி குணாதீத
நாதாந்த சக்தி யென்றுன்
நாமமே உச்சரித் திடுமடியர் நாமமே
நானுச்சரிக்க வசமோ
ஆரணி சடைக்கடவுள் ஆரணியெனப் புகழ
ஆகிலாண்ட கோடியீன்ற
அன்னையே பின்னையுங் கன்னியென மறைபேசும்
ஆனந்த ரூப மயிலே
வரைராயனுக் கிருகண் மணியாயுதித்த மலை
வுளர் காதலிப் பெண் உமையே.முருகன் பஜனை
அன்பருக்கு அன்பனே நீ வா வா முருகா
ஆறுபடை வீடுடையாய் வா வா முருகா
இன்பமய சோதியே நீ வா வா முருகா
ஈசனுமை பாலகனே வா வா முருகா

உரக நாபன் மருகனே வா வா முருகா
ஊமைக்கருள் புரிந்தவனே வா வா முருகா
எட்டுக்;குடி வேலவாநீ வா வா முருகா
ஏறுமயில் ஏறியே நீ வா வா முருகா
ஐங்கரனுக் கிளையவனே வா வா முருகா
ஆறுமுக வேலவனே வா வா முருகா
ஒய்யாரி வள்ளிலோலா வா வா முருகா
ஓங்காரத் தத்துவமே வா வா முருகா
ஒளவைக்குப தேசித்தவா வா வா முருகா
அகில லோக நாயகனே வா வா முருகா
ஓடிவாநீ ஓடிவா ஓடிவாநீ வா வா முருகா
5. அரகரோகரா சுவாமி அரகரோகரா
அரகரோகரா சுவாமி அரகரோகரா
கதிர்காம வேலனுக்கு அரகரோகரா
கந்தப்ப சுவாமிக்கு அரகரோகரா
திருப்பரங்கிரித் தீரனுக்கு அரகரோகரா
திருப்பழனிச் செல்வனுக்கு அரகரோகரா
திருவேரகப் பாலனுக்கு அரகரோகரா
குன்றிலாடும் குமரனுக்கு அரகரோகரா
குஞ்சரிதன் கணவனுக்கு அரகரோகரா
குறவள்ளி காந்தனுக்கு அரகரோகரா
குணங்கடந்த வேலனுக்கு அரகரோகரா
சோலைமலைக் கிழவனுக்கு அரகரோகரா
சொகுசுக்கார முருகனுக்கு அரகரோகரா
சிவசக்தி வடிவனுக்கு அரகரோகரா
சிங்கார வேலனுக்கு அரகரோகரா
அகங்கார நாசருக்கு அரகரோகரா
அன்பர்களின் நேயனுக்கு அரகரோகரா
எட்டுக்குடி எந்தைக்கு அரகரோகரா
எங்கும் நிறை இறைவனுக் அரகரோகரா (அரகரோகரா)
6. வேல்முருகா மால்மருகா வாவா சண்முகா
கால்பிடித்தோம் காத்தருள வா வா சண்முகா
நால்வேதப் பொருளான நாதா சண்முகா
நல்லதெல்லாம் உன்பால்கொண்டாய் நாதா சண்முகா
செல்லமாகச் சிவையணைக்கும் சேயே சண்முகா
செங்கதிர்வேல் தாங்கிய என் தேவா சண்முகா
நாறுமாலை அணிமார்பா நாயகா சண்முகா
நாதவிந்து கலாதீத நாயகா சண்முகா
ஆடுமயில் வாகனனே வா வா சண்முகா
பாடும்பணி தந்திடுவாய் பண்டிதா சண்முகா
வீடுநாமம் நின்திருதாள் வேண்டினேன் சண்முகா
வீரன் சூரன் உடல்கிழித்த வேலனே சண்முகா
ஆனந்தனே அற்புதனே வா வா சண்முகா
அடியார் உள்ளக் குகையமர்ந்த ஆண்டவா சண்முகா
தேறுதலைத் தருபவனே தேவா சண்முகா
சிங்கார ஓங்காரச் சீலனே சண்முகா
தில்லையிலே ஆடுந்தேவி பாலகா சண்முகா
எல்லையில்லா அற்புதங்கள் கொண்டவா சண்முகா
தொல்லையெல்லாம் கண்டபதம் தந்திடாய் சண்முகா
தோத்தரித்தோம் எங்கள்முன்னேவந்திடாய் சண்முனா
கல்லையொத்த மனமுருகக் கருணைசெய் சண்முகா
கலீரெனச் சிலம்பொலிக்க ஓடிவா சண்முகா
ஓடிவாநீ ஓடிவாநீ ஓடிவாநீ சண்முகா
ஆடிவாநீ ஆடிவாநீ ஆடிவாநீ சண்முகா
7. முருகா முருகா முருகா முருகா அரகரோகரா
முருகா முருகா திருமால் மருகா அரகரோகரா
வடிவேல் அழகா மயில்வாகனனே அரகரோகரா
வந்தெமை யாள்வாய் வடிவேல் முருகா அரகரோகரா
வடிவேல் முருகா வேல் வேல் முருகா அரகரோகரா
வேல் வேல் முருகா வெற்றிவேல் முருகா அரகரோகரா
ஞானவேல் முருகா சக்திவேல் முருகா அரகரோகரா
சக்திவேல் முருகா ஐயா முருகா அரகரோகரா
அரகர முருகா சிவசிவ முருகா அரகரோகரா
சிவசிவ முருகா ஜெயசிவமுருகா அரகரோகரா
8. சரணம் சரணம் முருகையா
சரவணபவனே முருகையா
வேர் வளரும் முருகையா
வேண்டுவ தருள்வாய் முருகையா
அறிவைத் தருவாய் முருகையா
ஆறுதல் தருவாய் முருகையா
இன்பம் தருவாய் முருகையா
இன்னல் தீர்ப்பாய் முருகையா
ஈசன் மகனே முருகையா
ஈடேற வைப்பாய் முருகையா
உண்மைத் தெய்வம் முருகையா
உயர்வைத் தருவாய் முருகையா
சேவற் கொடியாய் முருகையா
சேயெனைக் காப்பாய் முருகையா
வழியைச் சொல்வாய் முருகையா
வாழ்வைத் தருவாய் முருகையா
9. கந்தா முருகா வழிகாட்டு
உன் கருணைக் கண்ணால் பழியோட்டு
செந்தேன் போலே மொழி ஊட்டு
இச் சேய்மொழி கேட்டுன் அருள்கூட்டு
வேலைப் பிடித்திடர் செய்பவனே
வெறுப்பிலா தருள் செய்பவனே
காலைப் பிடித்தழத் தேடுகிறேன்
அதைக் காணாமல் நெஞ்சம் வாடுகின்றேன்
அன்னையும் தந்தையும் நீதானே
ஆதரிப்பாய் என்று வந்தேனே
பொன்னையும் பொருளையும் கேட்கவில்லை
ப+விழி திறந்தேன் பார்க்கவில்லை
குன்றுகள் தோறும் கோயில் கொண்டாய்
அன்பினால் சரனின் மாயை வென்றாய்
என்றுகல் நெஞ்சத்துள் கோயில் கொண்டாய்
இப்புவி வாழ்வெனும் மாயை வெல்வாய்
எல்லாம் உனது நாடகமோ
இங்கு யாரறிவார் அதன் காரணமே
வல்லான் உனக்கோர் இணையில்லை
வாழ்வினில் பிறிதோர் துணையில்லை.
10. கதிர்காமக் கந்தனே வா வா முருகா
காலர் காலன் பாலனே வா வா முருகா
சதிராடும் முருகோனே வா வா முருகா
சங்கீதப் பிரியனே வா வா முருகா. (கதிர்காமக்)
சொல்லுக்குச் சொல்லினுக்கும் முருகையா
உந்தன் சுந்தர நாமகீதம் முருகையா
அல்லும் பகலும் சொல்வேன் முருகையா
என்னை ஆள்பவன் நீயல்லவோ முருகையா (கதிர்காமக்)
வேத வேதாந்த ரூபா முருகையா
உன்தன் வேலும் மயிலும் துணை முருகையா
பாத மலர்க் கடிமை முருகையா
என்னைப் பக்தனாய்ப் பாடவைப்பாய் முருகையா (கதிர்காமக்)
எண்சாண் உடம்பினுள்ளே முருகையா
என்னில் எத்தனை எண்ணம் வைத்தாய் முருகையா
பண்ணுடன் பாடவேண்டும் முருகையா
பாவங்கள் தொலைய வேண்டும் முருகையா (கதிர்காமக்)
அகந்தையை மாற்றி நெஞ்சில் முருகையா
நீ அன்புடன் தங்கவேண்டும் முருகையா
முகமதனைக் காட்டிடுவாய் முருகையா
உன்னை மக்காலும் நம்பினேன் முருகையா (கதிர்காமக்)
11. குருநாதன் என்பவனைக் கும்பிடுவோமே – அந்த
கூத்தாடி சிவன்மகனை நம்பிடுவோமே
ஒருநாதன் அவனோடு ஒன்றிடுவோமே – இந்த
உலகெங்கும் அவன் வடிவம் என்றிடுவோமே (குருநாதன்)
இடர் முகத்தில் நாமழைத்தால் வந்திடுவானே – ஏன்
ஏனென்று கேட்பதற்கு முந்திடுவானே
சுடர் முகத்தில் புன்னகையைச் சிந்திடுவானே -நமக்குச்
சொல்லிய சுகமனைத்தும் தந்திடுவானே. (குருநாதன்)
காசுபணம் பெருகிவரச் செய்திடுவானே
கவலையெல்லாம் ஒருநொடியில் கொய்திடுவானே
மாசகல அருள்மழையைப் பெய்திடுவானே
வாசலிலே அவன் நினைவை நெய்திடுவானே. (குருநாதன்)
பக்தரெல்லாம் கூடிவந்து கூடிடுவோமே-நல்ல
பணிணசைக்குத் தாளம் கொட்டி ஆடிடுவோமே
முத்தியெல்லாம் தருபவனை நாடிடுவோமே
முத்தமிழில் அவன் பெருமை பாடிடுவோமே. (குருநாதன்)
12. நீலமயிலேறும் கோலமுருகனை
நித்தம் பணிந்திட வாருங்கடி
காலகால னெந்தை ஆலமுண்டர் கொஞ்சும்
கந்தனைப் பாடிட வாருங்கடி
சூலி சிவகாமி தாலி முத்தமிடும்
சுந்தர பாலனைப் பாடுங்கடி
காலில் சிலம்பொலி கலகலவெனவரும்
கந்தன் அழகினைப் பாருங்கடி (நீலமயி..)
சின்ன முனிவர்க்குச் செந்தமிழ் அமுதை
அன்புடன் பருகத் தந்தவண்டி
வண்ண மயிலேறும் வள்ளலை வாழ்த்தினால்
வந்தின்பம் தருவான் பாருங்கடி
வேலுடன் வந்தன்பர் வேதனை தீர்த்தின்பம்
வேண்ட வேண்டத் தரும் மெய்யனடி
நாலு வேதப்பொருள் ஆறு சமயத்து
நாயகன் எம்முயர் ஐயனடி. (நீலமயி..)
ஓலமிட்டதரர் காலனூர் புக்கிட
ஒய்யாரப் போர்செய்யும் வீரனடி
சீலமெல்லாம் தந்து தேவர்கள் நாட்டிற்கு
சேனாபதியான தீரனடி
கால நிலைகளைக் கருதா வன்பர்க்கு
கருணை பொழியுங் கந்தனடி
பால வடிவனென் பதி கதிர்காமன்
பக்தர்களுக் கென்றும் சொந்தனடி. (நீலமயி..)
13. குமரமலை வீற்றிருக்கும் எங்கள் குலதெய்வம் -தேவ
குஞ்சரியை மணமுடித்த எங்கள் குலதெய்வம்
அரவணையில் வந்துதித்த எங்கள் குலதெய்வம் -சிவ
சண்முகமாய் வந்துதித்த எங்கள் குலதெய்வம்
பழனிமலை வீற்றிருக்கும் எங்கள் குலதெய்வம் -சிவ
பக்தர்களைக் காத்தருளும் எங்கள் குலதெய்வம்
பண்டாரம் போலிருக்கும் எங்கள் குலதெய்வம்
பச்சைமயில் ஏறிவரும் எங்கள் குலதெய்வம்
ஆண்டிவேடம் போட்டிருக்கும் எங்கள் குலதெய்வம்
அண்டினோரை ஆதரிக்கும் எங்கள் குலதெய்வம்
(குமரமலை..)

வேலாயுதந் தரித்த எங்கள் குலதெய்வம்
வேல்முருக நாமம்கொண்ட எங்கள் குலதெய்வம்
தண்டாயுதம் தரித்த எங்கள் குலதெய்வம்
தண்டபாணிப் பெயருடைய எங்கள் குலதெய்வம்
வீப+தி தரித்திரக்கும் எங்கள் குலதெய்வம்
வீறுமயில் எறிவரும் எங்கள் குலதெய்வம்
ஆறுமுகமான பொருள் எங்கள்குல தெய்வம்
ஆறுபடை வீடுடைய எங்கள் குலதெய்வம்
சிவனார்க்கு உபதேசித்த எங்கள் குலதெய்வம்
சுப்ரமண்யப் பெயருடைய எங்கள் குலதெய்வம்
(குமரமலை..)

14. அஞ்சு முகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சலென வேல் தோன்றும் – நெஞ்சில்
ஒருகால் நினைக்கில் இருகாலும் தோன்றும்
முருகாவென் றோதுவோர் முன்.
15. துய்யதோர் மறைகளாறும் துதித்திடற்கரிய செவ்வேள்
செய்ய பேரடிகள் வாழ்க சேவலும் மயிலும் வாழ்க
வெய்ய சூரர் மார்புகண்ட வேற்படை வாழ்க அன்னான்
பொய்யில் சீரடியார் வாழ்க வாழ்கவிப் புவனமெல்லாம்.
16. வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட
தீரவேள் செவ்வெள் திருக்கைவேல் – வாரி
குளித்தவேல் கொற்றவேல் சூரர்மார்பும் குன்றும்
துளைத்த வேல் உண்டே துணை.
17. மூவிரு முகங்கள் போற்றி முகம்பொழி கருணைபோற்றி
ஏவரும் துதிக்க நின்ற ஈராறு தோள்கள் போற்றி
காஞ்சி மாவடி வைகும் செவ்வேள் மலரடி போற்றி யன்னான்
சேவலும் மயிலும் போற்றி திருக்கைவேல் போற்றி போற்றி.
18. அருவமும் உருவமாகி அனாதியாய் பலவாய் ஒன்றாய்
பிரமமாய்நின்ற சோதிப் பிழம்பதோர் மேனியாகக்
கருணைகூர் முகங்களாறும் கரங்கள் பன்னிரண்டுங் கொண்டே
ஒருதிரு முருகன் வந்தாங் உதித்தனன் உலகம் உய்ய.
19. ஆறிரு தடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்வ வெற்பைக்
கூறுசெய் தணிவேல் வாழ்க குக்கிடம் வாழ்க செவ்வேள்
ஏறிய மஞ்ஞைவாழ்க யானைதன் அணங்கும் வாழ்க
மாறிலா வள்ளி வாழ்க வாழ்கசீர் அடியாரெல்லாம்.